எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
முதல் சாமம்
இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம்
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் சாமம்
இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் சாமம்
இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைந்திடுவோம்.
சிவராத்திரி விரத பலன் கூறும் கதை
இந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் காண்போமா?.
மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும்ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசி ஒரு புறம் களைப்பும் மேலிட்டது.இரவுப் பொழுதும் வந்துவிட்டது. இரவுப் பொழுது என்பதால் வன விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி இருந்தான். தூக்கம் கண்களைக் கட்டியது. ஆதலால் மரத்தில் இருந்து விழுந்து விடுவோம் என நினைத்து தூக்கம் கொள்ளாது இருக்க மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கீழே போட்டான். இதனால் வேடன் துயில் செய்யாது இருந்தான். இவ்வாறு விடியும்வரை உணவும் இன்றி கண்விழித்திருந்து இலையை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கீழே போட்டுக் கொண்டிருந்தான். வேடன் இருந்த மரம் வில்வ மரம். அதன் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது. அறியாமலே வேடன் பிடுங்கி எறிந்த வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. வேடன் விடிந்ததும் மரத்தில் இருந்து இறங்கி வீடு சென்று சைவ உணவு உண்டான். வேடன் தன்னை அறியாமலேயே சிவராத்திரி தினத்தன்று உணவும் உறக்கமும் இன்றி சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூசித்ததால் சிவன் அருள் கிட்டியது. சிவலோகப் பிராப்தம் கிட்டியது.
வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் ‘வியாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. மற்றுமொரு கதையின் படி மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர் மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்துபதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல்இ உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான்.
அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கிசம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில் பிரபு இவன் கடைசிக் காலத்தில் மகா சிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன் அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான். இத்தகு மகிமை பொருந்திய சிவராத்திரி விரதமிருந்து நாமும் முக்திப் பேற்றினை அடைவோமாக.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.