முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 5,000 பக்தர்களுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரளம் மனு

வியாழக்கிழமை, 24 டிசம்பர் 2020      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டி்ல கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பெரும் சுமையாக அமையும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையில் கேரள அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  இந்த வழக்கில் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்த கேரள ஐகோர்ட், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனின் போது, பக்தர்கள் அனுமதிப்பது குறித்து கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவல், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கலாம் எனப் பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 14-ம் தேதி வரை இந்த முறையையே கடைப்பிடிக்கலாம். கொரோனா பரவல் குறைந்தால், பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.  ஆனால், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்து ஐகோர்ட் கடந்த 18-ம் தேதி அனுமதியளித்துள்ளது. எந்தவிதமான ஆய்வு அறிக்கையும் இன்றி, முறையான ஆவணங்களைப் பரிசீலிக்காமல் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. அதிகமான பக்தர்களை அனுமதித்தால், காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோரும் கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  பக்தர்கள் வருகையை அதிகப்படுத்தும்போது, அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகிறார்களா என்பதை சபரிமலையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆய்வு செய்வதும், பக்தர்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமானதாக அமையும்.  பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அச்சத்தால் மத்திய அரசு அனைத்து விமானங்களையும் பிரிட்டனுக்கு  தடை செய்துள்ளது. அதேபோன்ற சூழல்தான் கேரளாவிலும் ஏற்பட்டுள்ளது. ஆதலால், உடனடியாகத் தலையிட்டு, அதிகரிக்கப்பட்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து