முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக இந்தியர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் டுவிட்டரும் ஒன்று. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இதற்கிடையில், டுவிட்டர் சி.இ.ஓ. பதவியை ஜாக் டோர்சி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ. யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.  டுவிட்டரில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக், கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். 

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து