எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தை பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.
தைப்பூச தினம். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பவுர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம். இந்த தினம் நாளை 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது.
சிவசக்தி ஜக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது. சிவசக்தி இணைந்த இந்தப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம்.
இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள். உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்துக்கும் வாழ்வுக்கும் செயல்பாடுகளுக்கும் மறைவுக்கும் இயற்கையே காரணியாக அமைகிறது.
இயற்கையை மீறி எதுவும் செயல்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இயற்கையே விதியாக அமைகிறது. இதை வலியுறுத்துவதும் இந்தத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும். தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகிறார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.
அத்துடன் வாயு பகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளார் என்பதை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் இந்தத் தைப்பூச நன்னாளாகும். சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது.
சிவன் அருளினால் தோன்றிய முருகன் அன்னை சக்தியையும் பெற்று சிவசக்தி பேரருள் மிக்கவராக இந்தத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் கோவில்களில் அபிஷேகம், திருவிழா நிகழ்த்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்த நாளில் விரதமிருப்பார்கள். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்துக்கும் உள்ள இத்தகைய தொடர்பு காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூச நாளில் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைய தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தில் முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தில் காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.
தைப்பூச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகிறோம். இந்தத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும். இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் தைப்பூச நன்னாள் பல நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகிறது.
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். தைப்பூச நாளில் விரதமிருந்து உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று, சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டது தைப்பூச விரதம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
27 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.


