எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சானியா இதுவரை வென்ற பரிசுத்தொகை ரூ.52 கோடி
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 35 வயதான மிர்சா, 2005ல் WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். தற்போது 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தனது மற்றும் 3 வயது மகனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் சானியா மிர்சா, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவுகளின்படி, சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற மொத்த பரிசுத் தொகை டாலர் மதிப்பில் 7,030,997 (ரூபாய் மதிப்பில் சுமார் 52 கோடி) ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
____________
பிக்பாஷ் லீகில் சாதனை படைத்த மேக்ஸ்வெல்
பிக்பாஷ் லீக் தொடரின் கடைசி லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் மெல்போர்ன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஜோ கிளார்க் 35 ரன்னிலும், நிக் லார்கின் 3 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார்.
இறுதியில், மெல்போர்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது. இது பிக் பாஷ் லீக்கில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 4 சிக்சர், 22 பவுண்டரி உள்பட 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பிக் பாஷ் லீக் தொடரின் தனி ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேக்ஸ்வெல் 41 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இரண்டாவது அதிவேக சதமாகும்.
_____________
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு கார் பரிசு
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எச்1 எனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அவனி லெகரா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுதந்தவர் என்றப் பெருமையையும், அவனி லெகரா பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்1 துப்பாக்கி சுடுதல் பிரிவில், 249.6 புள்ளிகள் பெற்று புது சாதனையும் படைத்தார்.
இந்நிலையில், விளையாட்டு உள்பட பல துறைகளில் வித்தியாசமாக சாதனை படைக்கும் நபர்களுக்கு, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் கார்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில், ஏற்கனவே அறிவித்தப்படி, மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் சிறப்பான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய, மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம், வீரமங்கை அவனி லெகராவுக்கு பரிசளித்துள்ளது. இதனை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
____________
அண்டர் - 19 உலகக் கோப்பை: வீரர்கள் 4 பேருக்கு கொரோனா
மே.இ.தீவுகளில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியையும் வென்றது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், வீரர்களுக்கு ரேபிட்-கொரோனா பரிசோதனையும், அதில் பாஸிட்டிவ் இருந்தால், பிசிஆர் பரிசோதனையும் செய்யப்படும்.
இந்திய வீரர்களுக்கு நேற்றையபோட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆன்ட்டி ரேபிட் பரிசோதனையில் கேப்டன் யாஷ் துல், துணைக் கேப்டன், எஸ்.கே.ரஷீத், கர்நாடக வீரர்அஸ்வின் கவுதம், ஹரியானா வீரர் கர்வ் சங்வான் ஆகியோருக்கு ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் வந்தது. மற்றொரு வீரர் சித்தார்த் என்பவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதியானதால், அடுத்துவரும் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது .இது தவிர கேப்டன் துல், துணைக் கேப்டன் ரஷித், சங்வான், ஆகியோருக்கு ஆர்டிபிஆர் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.
________________
சாய்னா பற்றி அவதூறு பேச்சு: நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார்.
இதற்கு நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் என சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. ஜதராபாத் சைபர் கிரைம் போலீசிலும் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
கில்லை சமாதானப்படுத்திய டக்கெட்
13 Jul 2025இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
-
கடைசி போட்டியில் இங்கி. வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா
13 Jul 2025லண்டன்: கடைசி போட்டியில் தோல்வியடைந்த போதும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.
-
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
13 Jul 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில், இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.
பும்ரா 5 விக்கெட்...
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்
14 Jul 2025நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலிடம் உதவி இயக்குநரான ருத்ரா கதை செல்கிறார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.