எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி. 2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருடன் ஜுலான் கோஸ்வாமியும் கலந்துகொண்டார். இந்திய அணியின் சார்பாக ஜுலான் தான் முன்னிறுத்தப்பட்டார். அவர் தான் தொகுப்பாளரிடம் பேசினார். அந்தத் தருணத்தில் ஜுலான் கோஸ்வாமிக்கு உரிய மரியாதையை வழங்கினார் ஹர்மன்ப்ரீத். மேலும் இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த அனைவரும் கையெழுத்திட்ட சட்டை ஒன்று, ஜுலானுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்காக 16,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
______________
ரோகித் ஆட்டம் அற்புதம்: தினேஷ் கார்த்திக் புகழாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது., ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சை அவர் எதிர் கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய வீரர் என்பதை அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது.
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை. எனக்கு 2 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்துகளில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
_____________
எங்கள் தோல்விக்கு காரணம் அக்சர் படேல்- ஆரோன் பிஞ்ச்
இந்திய அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில்., நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
_____________
ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதியில் 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட் நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங்லியுடன் மோதுகிறார். சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.
_____________
ஹாக்கி இந்தியாவின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு
ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போலா நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


