எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன. நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களம் புகுந்தது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உ.பி. தக்கவைத்து கொண்டது. அதேவேளையில் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வந்த மும்பை சந்தித்த முதல் தோல்வி இது ஆகும்.
____________________
இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பை ஏற்று இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை வந்திருந்தார். அமோல் கலேவுடன் இணைந்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என கேப்ஷனிட்டுள்ளார். தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
________________
சிறப்பான ஆட்டம்: ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் பாராட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். அவரது இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாராட்டியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் தனது இடத்தை அவர் இழந்திருந்தார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 91 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருந்தார் ராகுல். “ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் நிறைந்திருந்த சூழலில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார் ராகுல். அவரது தரமான ஆட்டம் இது. அவருக்கு துணையாக களத்தில் பேட் செய்தார் ஜடேஜா. இந்திய அணியின் சிறப்பான வெற்றி இது” என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
________________
நாட்டு நாட்டு பாடலுக்கு ... வைப் செய்த விராட் கோலி
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
________________
சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் கெய்க்வாட்: ரெய்னா நம்பிக்கை
41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்
18 Oct 2025திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை, எவை?
19 Oct 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
காவிரி கரையோரங்களில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு
19 Oct 2025ஒகேனக்கல் : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
டியூட் திரை விமர்சனம்
19 Oct 2025தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர்.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Oct 2025தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
தெலங்கானாவில் வருகிறது புதிய சட்டம்: பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் : அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை
19 Oct 2025ஐதராபாத் : பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15 சதவீதம் பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கி
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.