எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி நேற்று வெளியிட்டது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி சாம்பியன் ஆனது.
இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதம் 4 முதல் 30 வரை டி20 ஆண்கள் உலகக் கோப்பை தொடரும், வங்கதேசத்தில் டி20 பெண்கள் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன. இந்த தொடர்களுக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றது.இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
கவுதம் காம்பீர் மீது குற்றச்சாட்டு
ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கவுதம் காம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீர் ஆரம்பத்திலேயே குஜராத் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார். அதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்ட நிலையில் நடுவர்களும் சக வீரர்களும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் அந்த சமயத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் கவுதம் கம்பீர் தம்மை திட்டியதாக அந்த ஆட்டம் முடிந்தவுடன் தனது வலைதள பக்கத்தில் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோலியால் முடியாது: பிரைன் லாரா
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றுமொரு சாதனையை உடைத்தார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (49) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வாய்ப்பிருந்தாலும் அதை விராட் கோலி சாதித்து காட்டுவது மிகவும் கடினம் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி தற்போது 35 வயது நிரம்பியுள்ளார். 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு இன்னும் 20 தேவைப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அதனால் இந்த சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஏனெனில் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் வீரருக்கு ஆதரவு
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் ஹர்டிக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை குஜராத் அணி வாங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யாவை இழந்தது மிகப்பெரிய சரிவு . இருப்பினும் அவரது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் சரியான வீரராக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.