எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
அஸ்வின் விக்கெட்...
இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 33 ரன்களும், படிதார் 34 ரன்களும், மஹிபால் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
ஜெய்ஸ்வால் அபாரம்...
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேட்மோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும், கேட்மோர் 20 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்களிலும், ரியான் பராக் 36 ரன்களிலும், துருவ் ஜுரல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
வெற்றிக்கு சம வாய்ப்பு...
ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்பு இருந்த போது, ஹெட்மெயர் மற்றும் பாவல் ஆகியோர் ராஜஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 19வது ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி சென்னையில் நாளை நடைபெறும் குவாலிபயர்-2 போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்கொள்கிறது.
அதிக கேட்சுகள்...
இந்த தோல்வியின் மூலம் 17வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளது. இந்த போட்டியில் போது ராஜஸ்தான் அணியின் பாவல், 4 கேட்சுகளை பிடித்து, ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதில் முதலிடத்தில் மும்பை வீரர் முகமது நபி, சென்னை வீரர் டேரில் மிட்சல் ஆகியோர் 5 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இருவரும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். இதே போல் சச்சின், டேவிட் வார்னர், ரவீந்திர ஜடேஜா, ஃபாஃப் டூ பிளஸிஸ், ரியான் பராக் ஆகியோரும் ஒரே போட்டியில் 4 கேட்சுகளை பிடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
சஞ்சு சாம்சன் பாராட்டு
வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், எங்களது அணியில் பயிற்சியாளர்களான சங்ககாரா மற்றும் ஷேன் பாண்ட் ஆகியோர் நிச்சயம் வீரர்களுக்கு பெரிய அளவில் உதவுகிறார்கள். அவர்கள்தான் வெற்றிக்கு காரணம். அஸ்வின் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒருபுறம் சிறப்பாக செயல்படும் வேளையில் ரியான் பராக், ஜெயிஸ்வால் போன்ற இளம் வீரர்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.
கோலி புதிய சாதனை
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.


