முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக போட்டிகள் நடத்த ஐ.சி.சி. முடிவு: நியூயார்க் ஆடுகளத்தில் பிரச்சினை

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவில் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தினால் நிதியளவில் ஐ.சி.சி. பலமடையும் என்ற கணக்கில் டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த ஐ.சி.சி. எடுத்த முடிவினால் டி20 கிரிக்கெட்டுக்கு சற்றும் தொடர்பற்ற பிட்ச்களில் போய் முடிந்துள்ளது.

2 போட்டிகளில்...

5 மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஏதுவான மைதானத்தையும், பிட்சையும் உருவாக்க முடியுமா? ஐ.சி.சி. திட்டமிடலில் ஏகப்பட்ட தவறுகள் மலிந்துள்ளன. குறிப்பாக நியூயார்க்கின் நசாவ் கவுன்டி கிரிக்கெட் மைதான பிட்சில் முதல் 2 போட்டிகளில் எந்த அணியும் 100 ரன்களை எடுக்க முடியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியும் அத்தகைய போட்டியாகவே ஆகியிருக்கும். என்ன இதில் 20 ரன்கள் கூடுதலாக எடுக்க முடிந்தது அவ்வளவே.

எளிதானது அல்ல.... 

அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் சிலவற்றை நடத்த 2021-ம் ஆண்டு முதலே பரிசீலித்த ஐ.சி.சி., 2023-ம் ஆண்டுதான் இந்த நசாவ் கவுன்டி மைதானத்தைக் கண்டுப்பிடித்தனர் என தெரிகிறது. உடனே பிட்ச்களை அங்கேயே தயாரிப்பது எளிதான காரணம் அல்ல. அதற்குத் தீர்வாகத்தான் ட்ராப் - இன் பிட்ச்களை தயாரித்து கொண்டு வர முடிவு செய்தது.

பனிப்பொழிவு... 

அதன்படி 10 ட்ராப் - இன் பிட்ச்களை வெளியே தயாரித்து மைதானத்தில் கொண்டு வந்து பதித்துள்ளது. இதில் 4 போட்டிகளுக்கான பிட்ச்கள் 6 பயிற்சிக்கான பிட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடிலெய்டில் இதற்கு பெயர் பெற்ற கியூரேட்டரால் தயாரிக்கப்பட்ட பிட்ச் என்றாலும் அது நிலையாக விளையாடுவதற்குரிய பிட்ச் ஆக மாற சில காலம் பிடிக்கும். அடிலெய்டில் தயாரிக்கப்பட்ட பிட்ச்கள் டிசம்பர் 2023-ல் தான் புளோரிடாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புளோரிடாவில் அப்போது வெயில் என்பதால் அங்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் டிசம்பர் முதல் மார்ச் வரை பனிப்பொழிவுக் காலம்.

பெரிய தவறாகும்...

ட்ராப் - இன் பிட்ச்களில் முக்கியப் போட்டியை நடத்துவதற்கு முன்பாக நிறைய பயிற்சி ஆட்டங்களை நடத்தி சோதிக்க வேண்டும். ஆனால், ஐ.சி.சி. 106 நாட்களிலேயே போட்டிகளுக்கு பிட்ச் தயார் என்பது போல் செயல்பட்டது. இந்தியா - வந்தகதேச அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி நடந்த போதுதான் பிட்ச்சின் தன்மை புரிய வந்தது. இந்த லட்சணத்தில் அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்ட 16 உலகக் கோப்பை டி20 போட்டிகளில் 8 போட்டிகள் இந்த நியூயார்க் மைதானத்தில் நடத்த திட்டமிட்டது பெரிய தவறாகும்..

அதிக போட்டிகள்...

ஐ.சி.சி. செய்த மாபெரும் தவறு என்னவெனில் ஜூன் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான 10 நாட்களுக்குள் இத்தனை போட்டிகளை இதில் நடத்துவது என்பதுதான். பிட்ச்சில் இருக்கும் பிளவுகளில் முளைத்த புற்கள்தான் பிட்ச்சில் பவுன்ஸ் சமச்சீராக இல்லாததற்கு பெரிய காரணம் என டேமியன் ஹாஃப் விவரிக்கிறார். இதோடு ஈரப்பதம், மேக மூட்டமான வானிலை எல்லாம் சேர்ந்து டி20 போட்டிகளை பதம் பார்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து