முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பம், புத்தாக்க துறைகள் குறித்து எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
Modi PM 2024-12-20

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.  

இருவருக்கும் இடையிலான உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “எலான் மஸ்குடன் பேசினேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நாங்கள் சந்தித்தபோது பேசிய தலைப்புகள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போது பேசினோம். தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்துறைகளில் ஒத்துழைப்பு களுக்கான மகத்தான ஆற்றல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான நமது கூட்டணியை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு பிப்ரவரியில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு அவர் எலான் மஸ்கைச் சந்தித்தார். மஸ்க் அந்தச் சந்திப்பில் தனது மூன்று மகன்களுடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் மும்பைக்கு அருகில் உள்ள ஒரு துறைமுகத்துக்கு சில ஆயிரம் கார்களை அனுப்பி வைப்பதன் மூலம், இந்தியச் சந்தைக்குள் நுழைய டெல்ஸா நிறுவனம் தயாராக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, எலான் மஸ்க் டெலிபோன் உரையாடல் நடந்துள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மின்சார கார் உற்பத்தி ஜாம்பவான் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் தனது கார் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்திய சந்தைகளில் டெஸ்லாவின் வருகை எதிர்பார்க்கப்படும் இந்தநிலையில், பிரதமர் மோடி - எலான் மஸ்க் இடையேயான உரையாடல், இறக்குமதி வரி குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தையுடன் இணைந்து நடந்துள்ளது.” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து