முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்கு குழிபறிப்போம்: திருமாவளவன்

வியாழக்கிழமை, 1 மே 2025      அரசியல்
Thirumavalavan 2023-09-26

சென்னை, உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்கு  குழிபறிப்போம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.

முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியுடைந்துள்ளது. ஜனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது. குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பா.ஜ.க. அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாமனைவரும் ஒருங்கிணைந்து அடிப்படை உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட உறுதியேற்போம். உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்குக் குழிபறிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து