முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலிடம் போரை நிறுத்த சொல்வது மிகவும் கடினம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      உலகம்
Trump-Netanyahu 2024 07 27

Source: provided

வாஷிங்டன் : இஸ்ரேல் போர் நிறுத்த சொல்வது கடினம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது என்றும், போரை நிறுத்துமாறு அந்நாட்டிடம் கோருவது இப்போதைக்கு கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் போரை நிறுத்தினால், தானும் நிறுத்திக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவிக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “இப்போது அந்த கோரிக்கையை வைப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைப் பார்க்கும்போது நிறுத்துவது மிகவும் கடினம். இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது. ஈரானின் செயல்பாடு குறைவாகவே உள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். யாரையாவது நிறுத்தச் சொல்வது கொஞ்சம் கடினம்.

ஒருவர் வெற்றிபெறக்கூடிய நிலையிலும், ஒருவர் தோற்கும் நிலையிலும் இருக்கும்போது போர் நிறுத்தம் என்பது சற்று கடினம். எனினும், போர் நிறுத்தம் ஏற்பட நாங்கள் தயாராகவும், விருப்பமாகவும் இருக்கிறோம். நாங்கள் ஈரானுடன் பேசி வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார். 

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்று அமெரிக்கா நம்புவதாக தேசிய புலனாய்வு இயக்குநரான துளசி கப்பார்ட் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், “அப்படியானால், அமெரிக்க உளவுத்துறையில் இருப்பவர்கள் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். துளசி கப்பார்ட் கூறியது தவறு” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து