எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள், அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடியவர்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
நலத்திட்ட உதவிகள்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
தொடர்ந்து ஆய்வு....
குறைந்தது ஒரு மாதத்துக்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன். நாம் அறிவிப்புகள் மட்டும் செய்வதில்லை. அவற்றை விரைந்து செயல்படுத்தி, அதையும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம். நான் திருப்பத்தூர் வரும் வழியில், பூதூர் ஊராட்சியில் இருக்கும் கலைஞர் கனவு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டேன். அங்கு குடியிருந்த ஒரு தாய் அவருடைய வீட்டுக்குச் சென்று நான் சந்தித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சியும். மறைந்த முதல்வர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று “குடிசையில்லா தமிழ்நாடு” அந்தக் கனவை நனவாக்கும் வகையில், அவரது பெயரிலான கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம். ஒரு வீட்டுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் தருகிறோம்.
2 லட்சம் வீடுகள்...
கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன், கேட்டுகொண்டே இருப்பேன். இதேபோல், மத்திய அரசு வீடு கட்டும் திட்டமும் இருக்கிறது. அது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்கு பெயர். ஒரு வீடு கட்டுவதற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
அரைகுறைதான்...
இதில், 60 விழுக்காடு நிதியை மத்திய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் தர வேண்டும். ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதாவது, 72 ஆயிரம் ரூபாய் தான் மத்திய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வழங்கி வீடு கட்டி தருகிறோம்.பெயர்தான் அவர்களுடையது. நிதி நம்முடையது. இப்படிதான், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவது இல்லை, தந்தாலும் அரைகுறைதான்.
தொடர்ந்து முயற்சி...
இந்த நிலையில் மத்தியில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க.வையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்துக்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல்.
அரசியல் நாடகம்...
தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அ.தி.மு.க.வை வைத்துக்கொண்டு, பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண், அண்ணா வளர்த்த மண், கருணாநிதி இதை மீட்ட மண், தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.
குழப்பத்தை ஏற்படுத்த...
அவர்களால் தமிழ்நாட்டுக்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை, ஓட்டு கேட்க முடியவில்லை, முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும். அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் திமுக ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். மறைந்த முதல்வர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.
அனுமதிக்கக்கூடாது...
அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும் எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அ.தி.மு.க.வை வைத்துக்கொண்டு, பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ (தவறாக) செய்து கொண்டிருக்கிறார்கள்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2025.
26 Jun 2025 -
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை
26 Jun 2025தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்
26 Jun 2025தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது.
-
கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
26 Jun 2025குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப
-
ரேஷன் பொருட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
26 Jun 2025சென்னை, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
-
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
26 Jun 2025புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
-
வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
26 Jun 2025புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கலைஞர் பாணியை கையில் எடுத்த ராமதாஸ்: மூச்சிருக்கும் வரை தானே தலைவர் என்கிறார்
26 Jun 2025விழுப்புரம், கலைஞர் பாணியில் தான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: இ.பி.எஸ். வலியுறுத்தல்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மூதாட்டி கொலை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Jun 2025சென்னை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
26 Jun 2025நாகப்பட்டினம், நாகை மீனர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீன்பிடி சாதணங்கள் சேதம் அடைந்தன.
-
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி கைதி மனு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
26 Jun 2025சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
26 Jun 2025சென்னை: பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.
-
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
26 Jun 2025சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 2 நாட்கள் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
மத்திய பா.ஜ.க. அரசு மதத்தால், சாதியால் தமிழ்நாட்டு மக்களை பிளவுபடுத்த முயற்சி திருப்பத்தூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
26 Jun 2025திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள், அவர
-
அரசியலமைப்பு தான் உயர்ந்தது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
26 Jun 2025மும்பை: '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.
-
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்
26 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவ
-
அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்: திருமாவளவன்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் கிருஷ்ணா கைது ஏன்..? சென்னை காவல்துறை விளக்கம்
26 Jun 2025சென்னை, நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
26 Jun 2025குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிய
-
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்
26 Jun 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
26 Jun 2025கோவை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனததுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!
26 Jun 2025ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது
-
'ஆபரேஷன் சிந்து' மூலம் மேலும் 272 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு
26 Jun 2025புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
-
சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
26 Jun 2025சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி.