முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Telangana-Car-2025-06-26

ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

இதனை பார்த்து பயந்து போன உள்ளூர்வாசிகள் கூச்சலிட்டனர். ஆனால், அதனையும் மீறி அவர் காரில் சென்று விட்டார். இறுதியாக ரயில் பாதையில் இருந்து விலகி, அருகேயிருந்த மரங்களின் மீது மோதி கார் நின்றது. இதில், கார் ஜன்னலின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் உள்ளூர்வாசிகள் அந்த இளம் பெண்ணை பிடித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, காவலுக்கு எடுத்து சென்றனர். விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்ததும், அதனாலேயே அப்படி அவர் காரை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. நிலைமையை தீவிர கவனத்தில் எடுத்து கொண்ட ரயில்வே பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு, வந்து கொண்டிருந்த ரயில்களை தடுத்து நிறுத்தினர். இதனால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.

சங்கர்பள்ளி போலீசார் அந்த இளம்பெண்ணை விகாராபாத் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து