முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      தமிழகம்
JaganMoorthi 2025-06-16

சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. 'பூவை' ஜெகன்மூர்த்தி மற்றும் முன்னாள் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்கிடையே ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்டின் உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து