முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறியடிக்கப்படாத சாதனை

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      விளையாட்டு
PT-Usha 2024 08 12

Source: provided

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார். இந்தியா சார்பில் ஆசியப்போட்டிகளில் தங்கம் வென்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர்.கடந்த 41 ஆண்டுக்கு முன், அவரது 20 வயதில் கேரளாவில் மாநில அளவில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தங்களில் பி.டி.உஷா சாதனை படைத்தார். அதாவது, 1984ம் ஆண்டில், 100 மீட்டரை 11.40 வினாடிகளிலும், 400 மீட்டரை 52.70 வினாடிகளும் கடந்து சாதனை படைத்து இருந்து இருந்தார். இந்த சாதனையை முந்தி செல்ல கொல்லத்தைச் சேர்ந்த 20 வயதான ஆர்த்ரா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

20 வயதான ஆர்த்ரா, 100 மீட்டரை 11.87 வினாடிகளில் கடந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டரை 11.84 வினாடிகளில் கடந்த ஓட்டப்பந்தய வீரரான ஷில்பி, இந்த முறை, 12.10 வினாடிகளில் கடந்தார்.  ஆனாலும், 41 ஆண்டுக்கு முன், அதாவது 20 வயதில், பி.டி. உஷா நிர்ணயித்த இலக்கை, திருவனந்தபுரத்தில் நடந்த 69வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் யாரும் முறியடிக்கவில்லை என்று கேரள விளையாட்டுத் துறையினர் கூறி வருகின்றனர்.

____________________________________________________________________________________

விளையாடுவாரா ரிஷப்?

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் பாய்ந்து விழுந்து பந்தை பிடிக்க முயற்சித்தபோது, இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார். 

மான்செஸ்டரில் இன்று தொடங்கும் 4-வது டெஸ்டிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்தான். இதனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக ஆட வைக்க கூடாது என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் . மான்செஸ்டரில் ரிஷப் பண்ட் தற்போது பயிற்சியை தொடங்கி உள்ளார் . விக்கெட் கீப்பிங் , பேட்டிங் பயிற்சில் ரிஷப் பண்ட் ஈடுபட்டு வருகிறார் . இதனால் அவர் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

____________________________________________________________________________________

ரொனால்டோ சறுக்கல்

கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்)  பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா)   முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர்.   குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர் மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார். மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர் மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

____________________________________________________________________________________

அல்காரஸ் திடீர் விலகல்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

____________________________________________________________________________________

லக்சயா சென் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-14 என லக்சயா சென் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சீன வீரர் அடுத்த இரு செட்களை 24-22, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால் இந்தியாவின் லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து