எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூவுளகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பூஜைகளை பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களே சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை தலா 3 நாட்களாக பிரித்து மக்கள் வழிபடுகின்றனர். பிரப்பிரும்மம் ஒன்றே என்றாலும் உலக மக்களுக்காக நன்மை செய்திடும் பொருட்டு துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். முதல் மூன்று நாட்கள் துர்க்கா சக்தி ரூபமாகவும், 2 வது, 3 வது நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து மக்கள் வழிபடுகின்றனர். துர்க்கா தேவி துன்பங்களை போக்குபவள். லட்சுமி பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைக்கக் கூடியவள். நல்லறிவு இருந்தால்தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால் அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமியன்று அம்பிகையானவள் ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிப்பிடுகிறது. அம்பிகையின் விக்ரக ரூபத்திலோ அல்லது படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்திடலாம். 9 நாட்களிலும் தேவி பகவதி பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை தேவியராக கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திறஅகு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழ வேண்டும். இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும். இது தவிர உலகை காத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் நவராத்திரி விழா அமைகிறது.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நவராத்திரியின் போது கொலு வைத்து வழிபடுவதோடு ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபட வேண்டும். அம்பிகையை சக்தி சொரூபியாக நினைத்து தியானிப்பதால் நமது சகல பாவங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது நிஜம். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழா வரும் 28 ம் தேதி ஆரம்பமாகிறது.
நவராத்திரி கொலு அமைக்கும் முறைகள்:
மனிதனின் உடல் வலிமை, பராக்கிரமம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால்தான் மனிதன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியரான மலைமகள்(துர்க்கை), அலைமகள்(மகாலட்சுமி), கலைமகள்(சரஸ்வதி) ஆகியோருக்கு மூன்று நாட்களாக வழிபடும் முறையும், ஒன்பது நாட்களாக ஒன்பது சக்தியினரை வழிபடும் முறையும் உள்ளது. இதில் ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையான
நவராத்திரி கொலு:
நவராத்திரியின் சிறப்பு அம்சமே கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும். இதில் கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1. முதலாம்படி:
முதலாம்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
2. இரண்டாம்படி:
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.
3. மூன்றாம்படி:
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
4. நான்காம்படி:
நாலாம்படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
5. ஐந்தாம்படி:
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
6. ஆறாம்படி:
ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
7. ஏழாம்படி:
மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.
8. எட்டாம்படி:
எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
9. ஒன்பதாம்படி:
ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2026சென்னை, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிகார பகிர்வுக்கான நேரமிது: காங்., எம்.பி. கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம்
05 Jan 2026சென்னை, அதிகார பகிர்வுக்கான நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: தொழிலாளர்கள் 100 பேருக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
05 Jan 2026சென்னை, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்
-
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
05 Jan 2026சென்னை, திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-01-2026
05 Jan 2026 -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
05 Jan 2026நேபிடாவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
-
58-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை
05 Jan 2026சென்னை, 58-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.13.73 கோடி மதிப்பில் 155 புதிய வாகனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்
-
எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் கடிதம்
05 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
-
திருப்பரங்குன்ற மலை தீப தூண் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு
05 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி.
-
முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு
05 Jan 2026டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.
-
சென்னையில் புத்தகத் திருவிழாவை ஜன 8-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
05 Jan 2026சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
-
கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
05 Jan 2026வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் 
-
ஒரே நாளில் 2 - வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: தங்கம் ரூ.1,280 - வெள்ளி ரூ.9, 000 அதிகரிப்பு
05 Jan 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜன. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
-
சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் ராஜ்நாத் சிங்
05 Jan 2026கோவா, 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து
-
வெனிசுலா விவகாரம்: போப் லியோ வேண்டுகோள்
05 Jan 2026வாடிகன் சிட்டி, வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்: அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் ரோட்ரிகஸ் அழைப்பு
05 Jan 2026காராகஸ், வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இஷா சிங் டெல்லிக்கு திடீரென இடமாற்றம்
05 Jan 2026புதுச்சேரி, புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.எஸ்.பி. இஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை
05 Jan 2026மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் மு
-
தனது அரசு மீது விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்: முதல்வர் ரேவந்த் பேச்சால் சர்ச்சை
05 Jan 2026ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர்&nbs
-
தேர்தல் செயலியை மேம்படுத்த கருத்து கூறலாம்: பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்
05 Jan 2026சென்னை, தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூறலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
05 Jan 2026நியூயார்க், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை
05 Jan 2026டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளி
-
கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கனிமொழி எம்.பி.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
அபுதாபியில் கார் விபத்து: இந்தியர் 4 பேர் உயிரிழப்பு
05 Jan 2026அபுதாபி, அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



