எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, நவ.19 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 400 பக்கங்களுக்கும் மேலான முக்கிய ஆவணங்களை சுப்பிரமணியசாமியிடம் சி.பி.ஐ. வழங்கியுள்ளது. இதையடுத்து ப. சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இது போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது என்று சுவாமி கூறியுள்ளார்.
2 ஜி வழக்கில் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார் சுப்பிரமணிய சுவாமி. இதற்கான ஆதாரமாக சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை அவர் மேற்கோள்காட்டி வருகிறார். மேலும் அந்த கடிதங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு செய்தார். அதை விசாரித்த கோர்ட், சுப்பிரமண்யசுவாமி கேட்கும் ஆவணங்களை தருமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி கேட்ட ஆவணங்களை சி.பி.ஐ. சுப்பிரமண்ய சுவாமியிடம் ஒப்படைத்தது. தொலைத் தொடர்பு துறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் 400 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.
இந்த ஆவணங்கள் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் முதல் 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்கு உட்பட்டவை என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் ப. சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான கடித போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் குறித்து சுவாமி கூறுகையில், இந்த ஆவணங்கள் எனக்கு திருப்தி தருகிறது. ப. சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இது போதுமான ஆதாரமாகும். இதை முழுமையாக படித்த பின்னர் வருகிற 27 அல்லது 28 ம் தேதி எனது விளக்கத்தை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்றார். வருகிற டிசம்பர் 3 ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் 2 ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025