முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

DNA மூலம் மம்மிக்களின் முகங்கள் மறு உருவாக்கம்

பண்டைய காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை எகிப்து நாட்டின் மம்மிக்கள். தற்போது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் மூலம் பண்டைய எகிப்து மம்மிக்களின் முகங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மார்க்ஸ் பிளாங் இன்டிடியூட் ஆஃப் சையின்ஸ் ஆஃப் ஹியூமன் ஹிஸ்டரி மையமும் துபின்சென் பல்கலை கழகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன. இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிக்களின் உடலிலிருந்து டிஎன்ஏ சாம்பிள்கள் தொகுக்கப்பட்டு முக மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சி இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தின் அசலான முகங்களை நம்மால் இனம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சந்திரனில் கிராமம்

ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் உள்ள 22 உறுப்பு நாடுகள் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சியில் இரங்கியுள்ளதாம். சேஞ்ச்-5 என்ற விண்கலத்தை அங்கு அனுப்பி மண், பாறை போன்றவற்றை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago