முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியாவுக்கு முதலிடம்

உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம்.

எலிகளுக்கும் கோயில் கட்டி வணங்கும் மக்கள்

இந்தியாவில் மக்கள் விலங்குகளை கடவுளாக வணங்கும் பழக்கம் தொடர்கிறது. மக்கள் வணங்க நினைக்கும் முதல் இனங்கள் எலிகள் அல்ல என்றாலும், ராஜஸ்தானில் எலிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது. அதாவது ராஜஸ்தானில் உள்ள கர்ணி மாதா கோவில் எலி கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த கோயிலில் எலிகளை பராமரிக்க வசதியாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆங்காங்கே சுவர்கள், பல இடங்களில் பெரிய ஓட்டை போடப்பட்டுள்ளன. மேலும் எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. அதே போல் வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் யாரேனும் எலியை கொன்றுவிட்டால் அதற்கு பதிலாக தங்கத்தினால் ஆன எலியை கோயிலுக்கு வழங்குகின்றனர். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

வலிமை ஆக்கும்

சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

தகவல் பரிமாற்றத்துக்கு தந்தி என்ற கருவி இருந்தது தெரியுமா?

இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது.  பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

3 டன் எடை கொண்டது

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago