முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பெரிய மூளை

ஆர்க்டிக் பகுதியில், கரிம மாசுபாடுகள், சுகாதார பிரச்சினைகளால், வனவிலங்குகளில் பெரிய மூளை கொண்ட, போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

சூப்பர் சோனிக்

‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை  அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.

அதிக வெப்பநிலை கொண்ட பாலைவனம் எது தெரியுமா?

இந்தியாவில் தார் பாலைவனம் காணப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமாக பரந்து விரிந்து இருப்பது சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 3.6 லட்சம் மைல்கள் சதுர பரப்பளவு கொண்டவையாகும். இங்கு வெப்பநிலை சில சமயங்களில் 136 டிகிரி வரை கூட எகிறுமாம். சராசரியாகவே இங்கு வெப்பநிலை 100 டிகிரிக்கு மேலேதான் உயர்ந்து காணப்படுமாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

சீச்சீ இந்த ஹோட்டலுக்கு போகாதீங்க.. உவ்வே...

ஜப்பானில் உள்ள தலைநகரான டோக்கியோவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கப்பட்டது. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா.. அதன் பெயர் அமிர்தம் என்பதாகும். விஷயம் அதுவல்ல. இந்த ஹோட்டலுக்குள் 18 வயது முதல் 60 வயது வரையிலான அதிலும் குறிப்பாக அதிக எடை இல்லாதவர்களும், உடலில் டாட்டூ குத்தி கொள்ளாதவர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமா அவர்கள் அனைவரும் ஆடைகளின்றியே ஹோட்டலுக்குள் வலம் வர வேண்டும் என்பதும் கூடுதல் நிபந்தனை. சராசரி காட்டிலும் உங்கள் உடல் எடை 15 கிலோ கூடுதலாக இருந்தால் தனியாக தெரிவித்து முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி. எப்படி ஒரு விநோத ஹோட்டல் பாருங்கள்.

முதியவர்களுக்காக மட்டும்...

ஜப்பான் நாட்டை சார்ந்த 81 வது பாட்டி மசாக்கோ வகாமியா, வயது முதிர்ந்தவர்களுக்கான ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆப் முதியவர்கள் விளையாடும் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹினாடன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது. இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள். இந்த ஆப்பை உருவாக்கிய இவர், ஓய்வு பெற்ற வங்கியாளர். மேலும் தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony