முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காப்பி பேஸ்ட் கையடக்க எந்திரம்

தொழில் நுட்ப யுகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. முன்பு ஒரு ஆவணத்தை நகலெடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய போட்டோஸ்டெட் இயந்திரங்கள் தேவைப்பட்டன. தற்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்கேனர்கள் வந்துவிட்டன. தற்போது அவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், கையடக்க காப்பி பேஸ்ட் எந்திரம் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே.. இந்த நமக்கு தேவையான எதன் மீதும் வைத்து தேவையான பரப்பில் ஷேவிங் ரேஷரை இழுப்பது போல ஒரு இழு. அவ்வளவுதான்  அப்படியே எழுத்தோ, படமோ காப்பி ஆகிவிடும். பின்னர் நமக்கு தேவையான காகித்த்தில் வைத்து மீண்டும் ஒரு இழு. அவ்வளவுதான் அப்படியே பிரிண்ட் ஆகிவிடும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

டிஜிட்டல் தொழில்நுட்பம்

காகிதங்களில் வரையப்படும் படங்களை டிஜிட்டல் மயமாக மாற்ற ஐ.எஸ்.கே.என் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. லேப்டாப் போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவைசில் பென்சிலை பொருத்தி, காகிதத்தை அதற்கான pad- இல் வைத்து வரைந்தால் அது டிஜிட்டல் ஓவியமாக மாறிவிடும். பேட்-டின் விலை ரூ.2000 , பென்சிலின் விலை ரூ.1270.

தகுந்த நேரம்

ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் அல்சர் வருவதை தடுக்க வும், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தம் குறைய செய்யும். காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழுப்பை தடுக்கும்

1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony