முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆயுள் கூடும்

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதிக எண்ணெய் எடுப்பதால் அவை இரத்த குழாய்களில் படிந்து ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. 

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஆழ்கடலில் வாழும் அரிய வகை பேய் சுறா கண்டுபிடிப்பு

நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர். இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

உலகிலேயே குறைவான மழை பொழியும் இடம் எது?

உலகிலேயே மிகவும் குறைவாக மழை பொழியும் இடம் பாலைவனம் என நீங்கள் கருதினால் அது தவறு.. உண்மையில் மழை குறைவாக பெய்யும் இடம் துருவ பிரதேசமான அண்டார்டிகாவில் தான் மழை பொழிவு குறைவு. அங்கு ஆண்டுக்கு 6.5 அங்குலம் மட்டுமே மழை அல்லது பனி பொழிகிறது. அதே நேரத்தில் கொலம்பியாவில் உள்ள லோரோ என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 அங்குலத்துக்கும் அதிகமாக மழை பொழிகிறது.

எதிரியா நண்பனா என கண்டு பிடிக்கும் நீர்யானைகள்

காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர். நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony