முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நடந்து செல்லும் அதிசய மீன்

ரெட்ஹேண்ட் மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருக்க, டாஸ்மானியாவின் தென்கிழக்குக் கடல்பகுதிக்கு டைவிங் பயிற்சி சென்றவர்கள் ரெட் ஹேண்டைப் பார்த்துள்ளனர். அதென்ன ஹெட் ஹேண்ட் மீன். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை மீன்ரெட்ஹேண்ட். துடுப்புகளை கைகளைப் போல இது பயன்படுத்துகிறது. தரையில் கைகளை ஊன்றி குழந்தை தவழ்வதைப் போல கடலின் மேற்பரப்பில் தவழ்கிற ஆற்றல் வாய்ந்தது ரெட்ஹேண்ட். தண்ணீருக்குள் நீந்துவதை, நடப்பதை அதிகமாக விரும்புகின்ற மீன் இது. கடலுக்கு அடியில் உணவு தேடும்போது தன் கால்களால் நடந்து கைகளால் உணவைத் தேடி உண்கின்றது. அதே போல மற்ற மீன்கள் தன் செவில்களினால் நீந்துகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஹேன்ட் ஃபிஸ் என அழைக்கப்படும் இந்த மீன் தன் கைகள் மற்றும் கால்களால் நீந்துகின்றன.

அதிகமில்லை ரூ.15 லட்சம்தான்!

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.

ரயிலின் கடைசி பெட்டியில் X குறியீடு ஏன்?

நாம் அனைவரும் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பெரும்பாலானோர் ரயிலின் கடைசி பெட்டியை கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக கடைசி பெட்டியில் மிகப் பெரிய அளவில் ஆங்கில எழுத்தான X வடிவில் என்ற குறியீடு வரையப்பட்டுள்ளதை பார்த்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில்வே பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அந்த குறீயிடானது. புறப்பட்டு செல்லும் ரயிலின் அனைத்து பெட்டிகளும் எந்த வித பழுதும் இன்றி, முறையாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கத் தான் அந்த குறியீடு வரையப்பட்டுள்ளது. அதை பார்த்த பிறகே கார்டு கொடியை அசைக்க ரயில் புறப்பட தயாராகும். அதே போல இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும்.அதே போல் கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்பட்டிருக்கும் LV என்ற ஆங்கில எழுத்தும் பாதுகாப்பு குறித்து துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவை எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும். அவற்றை சரி செய்த பிறகே ரயில் புறப்படும்.

அச்சம் தவிர்

இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர்.  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.

உலகின் மிகப் பெரிய காளை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சியானினா என்ற காளை இனம் தான் தற்போது வரையிலும் உலகிலேயே வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளில் மிகப் பெரிய காளை இனமாக அறியப்பட்டுள்ளது. உயரத்திலும் எடையிலும் இவை மெகா சைஸ். தொடக்கத்தில் இவை இத்தாலியில் வளர்க்கப்பட்டன. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பரவின. இவற்றின் எடை சுமார் 1700 கிலோ. தொடக்கத்தில் இறைச்சிக்காக இவை வளர்க்கப்பட்டன. 2 ஆம் உலகப் போருக்கு பிறகு இது உலகம் முழுவதும் பரவலான இனமாக மாறியது. பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony