முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தங்க சாப்பாடு

ஐதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது. இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும். இதன் விலை வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாம்.

அதிசய வானவில் கிராமம்

 ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

வாகனங்களை இழுக்கும் அதிசய காந்த மலை

பொதுவாக இறக்கமான இடங்களில் புவியீர்ப்பு விசையால் வாகனங்கள் கீழ் நோக்கி செல்வதுதான் வழக்கம். ஆனால் முற்றிலும் அதிசயதக்க வகையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாகனங்களை மேல் பகுதியை நோக்கி இழுக்கிறது. இதனாலேயே இது காந்தமலை என அழைக்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்துக்கும் லே என்ற சுற்றுலா தளத்துக்கும் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. எந்த ஓர் ஊர்தியையும் நியூட்ரல் கியரில் நிறுத்தினால் ஊர்தி காந்தமலை இருக்கும் திசைநோக்கி தானாக நகர்கிறது. அது ஆச்சரியம் தானே..

அச்சு பிசராமல்....

ஒரு மனிதனின் கையெழுத்தை அப்படியே உள்வாங்கி அதை எழுதுகிறது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பான்ட் ரோபோ. மனிதன் பேனாவை பிடித்து எழுதுவது போல் ரோபோ அழகாக பேனாவை பிடித்து எழுதக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் கணினி, டேப்லட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றில் பான்ட் எழுதும் கடிதத்தை டிஜிட்டல் கடிதமாகவும் மற்றவருக்கு அனுப்பி வைக்கலாம்.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony