முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இனி பயணச்சீட்டு வாங்க சில்லறை வேண்டாம் - க்யூஆர் கோடு போதும்

சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு சுதந்திரம்

ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்கள் புதிய சிந்தனைகளுடன் பணிபுரிய சுதந்திரம் அளிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமர் பிர்வாத்கார் என்பவரின் நிறுவனம் ஆய்வு நடத்தியது.இதில், பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களிடையே புதிய சிந்தனைகளை விதைக்கத் தவறிவிட்டது எனவும், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்களை புதிய சிந்தனைகளுடன் பணியாற்ற அனுமதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

தினமும் ஒரு கோப்பை தேநீர்

இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago