முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எக்ஸ்-ரே வசதி

ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் புதிய ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நீங்கள் நினைக்கும் பொருளினுள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியும். பழ வகைகளை சாப்பிடும் முன் அதனுள் ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும்.

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

பழமையான தொழில் பல் மருத்துவம்

உலகின் பழமையான தொழில்களில் பல் மருத்துவமும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வின் போது கிடைத்த மண்டையோட்டில் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லில் துளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலை கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது வரலாற்று காலத்துக்கு முன்பே ஒரு சொத்தை பல்லை கருவிகளால் அகற்றிய தடயம் கண்டறியப்பட்டுள்ளது.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

விரைவில் வருகிறது பறக்கும் பைக் - இனி அபார்ட்மெண்டில் பார்க்கிங் சண்டை வராது

நகரங்களில் வசிப்பவர்களின் மிகப் பெரிய பிரச்னை எது என்று கேட்டால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதுதான். இதில் எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து வைக்க தனி நாட்டாண்மை தான் எப்போதும் வர வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு வண்டிகளை மாற்றி மாற்றி நிறுத்தி எடுத்து வைப்பதில் கேட் காவலர்களும் களைத்து போய் விடுவர். அபார்ட்மென்ட் கொஞ்சம் பெருசாக இருந்தால் போதும், வண்டியை எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பதில் ஒரு இசை நாற்காலி போல பெரும் போட்டியே நடக்கும். இனி அதற்கெல்லாம் வேலையே இருக்காது. நீங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்துக்கு பறக்கும் பைக்கிலோ, காரிலோ போய் இறங்கி, அங்கேயே உங்கள் வீட்டின் பால்கனியில் பறக்கும் பைக் அல்லது காரை நிறுத்திக் கொள்ளலாம். இதனால் நகர நெரிசலில் சிக்கி அவதிப்படவோ, ஹார்ன் ஒலிகளால் தலை வீங்கி போகவோ வேண்டியதில்லை. ஒரு டிஜிட்டல் யுகம் நம் கண்முன்னே மாய உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நமது பேரப் பிள்ளைகள் சாலைகளில் வாகனங்கள் ஓடின என கேட்டால் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago