முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அரிய வைரம்

கிறிஸ்தவ மதப் பாதிரியார் ஒருவர் உலகின் மிகப்பெரிய வைரத்தைத் தோண்டி எடுத்துள்ளார். இந்த வைரம் சியரா லியோன் அதிபர் எர்னெஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வைரத்தைப் பாதுகாப்பாக நாட்டுக்கு வழங்கியதற்காக அதிபர் எர்னெஸ்ட், பாதிரியாருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

நமக்கெல்லாம் ஆண்டில் சில மாதங்கள், வாரங்கள் மழை பெய்தாலே ஐயோ அப்பா என அலறத் தொடங்கி விடுகிறோம். ஆண்டு முழுவதும் மழை பெய்தால்.. அவ்வளவுதான்.. ஆனால் ஒரு காலத்தில் மாதம் மும்மாரி அதாவது மூன்று முறை மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஓர் கார் காலம். சரி விஷயத்துக்கு வருவோம்... ஹவாய் தீவில் உள்ள Kauai என்ற இடத்தில் Waialeale மலைப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 நாட்களும் மழை பெய்கிறதாம். அம்மாடியோவ்... நினைத்தாலே குளிரக்கிறது அல்லவா.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

உலகில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ மீண்டும் தோன்றியது

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ ஒன்று மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தன்னை இந்த பூமிக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் பெயர் Valviloculus pleristaminis என்பதாகும். ஆஸ்திரேலியாவின் மென்மையான தோற்றமுடைய பிளாக்ஹார்ட் சஸ்ஸாஃப்ராஸ் மலருடன் தொடர்புடையது. இது ஒரு கண்ட திட்டிலிருந்து மற்றொரு கண்ட திட்டுக்கு இடம் மாற்றமாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவிலிருந்து 4000 தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதியான மியான்மரின் இந்த மலர் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 2 மிமீ. இதன் மையத்தில் சுமார் 50 மகரந்த மொட்டுகள் சுழல் வடிவில் அமைந்திருக்கும்.  இவை கண்டம் தாண்டி சென்றது ஆச்சரியம் தானே..

மாம்பழ பேக்

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும்.  மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!