முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பயத்தை போக்க...

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

உலகிலேயே அரிய வகையான இந்த குதிரையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

குதிரை என்றாலே அதன் உயரம், கம்பீரம், திமிர் ஆகியவைதான் நமக்கு தெரியும். ஆனால் உலகிலேயே அழிந்து வரும் இனமான, மிக சிறிய அரிய வகை குதிரை இனத்தை அர்ஜென்டினாவைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் 19 நூற்றாண்டின் மத்தியில் மீண்டும் உருவாக்கினர். அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில் அந்த குதிரை இனத்துக்கு Falabella என அந்த குடும்பத்தினரின் பெயரே சூட்டப்பட்டது. இந்த குதிரையின் மொத்த உயரம் எவ்வளவு தெரியுமா வெறும் 70 செமீ தான். அதாவது ஒரு ஆட்டின் உயரம் கூட இருக்காது. தற்போது இந்த குட்டை ரக குதிரை இனத்தை மேம்படுத்தி வளர்ப்பதையே அர்ஜென்டினாவில் பலர் செய்து வருகின்றனர். ஒரு பெரிய குதிரையின் சிறிய பொம்மை வடிவில் காட்சியளிக்கும் இந்த குதிரைகளை பார்க்க பார்வையாளர்கள் திரண்டு வருகின்றனர்.

உலகில் முதன்முதலில் வைர சுரங்கம்

இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கங்களிலிருந்து வைரம் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியா வைரத்தின் மதிப்பை உணர்ந்திருந்தது. இந்தியாவில் தான் முதன் முதலில் வைர சுரங்கங்கள் காணப்பட்டன.  கிருஷ்ணா, கோதாவரி நதி படுகைகளில் உள்ள வண்டல் படுகைகளில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்குதான் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாக இன்றும் இந்தியாவில் கிடைத்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான வைரமாகும்.

வெகு தொலைவில் இல்லை

முன்பு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், வாயில் இருக்கு வழி என்ற பழமொழிக்கு ஏற்ப கேட்டுகேட்டுதான் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் திசை காட்டி பலகைகள் வந்தன. அவையும் கால போக்கில் டிஜிட்டல் போர்டுகளாக மாறினவே ஒழிய பலகைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. கணணி உலகம் அதையும் மாற்றி ஜிபிஎஸ் கருவியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவியில் நாம் பார்க்கும் படத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. தற்போது அதையும் களையும் வகையில் புதிய ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.  அதென்ன ஆக்மென்ட் ரியாலிட்டி... வெர்ச்சுவல் ரியாலிட்டியில் செயற்கையான உலகை நிஜம் போல பார்ப்போம்.  ஆனால் ஆக்மென்ட் ரியாலிட்டியில் நிஜ உலகின் மீது டிஜிட்டல் இமெஜ்கள் பரவி இருக்கும். இதன் மூலம் இடத்தின் பெயர், செல்லும் பாதை, செல்ல வேண்டிய திசை, அடைய வேண்டிய முகவரியின் தொலைவு அனைத்தும் நிஜ காட்சிகள் மீது பரவியிருக்கும். இதற்கான சோதனை ஓட்டம் இப்போதே அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய வைரம்

ரஷ்ய வரலாற்றி‌லேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டாயானம்

வட்டாயானாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுகின்றன. இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால் கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுதோடு மட்டுமல்லாமல், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!