முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சுற்றுச்சூழலுக்காக தானாகவே 16 ஆண்டுகள் சட்டம் பயின்ற முதியவரை உங்களுக்கு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்தவர் வாங் என்லின். இவர் 3 வகுப்பை கூட நிறைவு செய்யாதவர். ஆனால் இவர் தனக்கு தானே 16 ஆண்டுகள் சட்டம் பயின்றார். எதற்கு மற்றும் எப்படி தெரியுமா.. அவரது கிராமத்தை அருகில் இருந்த ரசாயன ஆலை மாசுபடுத்தியது. அதற்கு எதிராக சட்டப் போர் தொடுக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரால் அனைத்து சட்ட நூல்களையும் வாங்க பணமில்லை. எனவே உள்ளூரில் உள்ள புத்தக கடையில் பை நிறைய மக்காசோளத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அங்கேயே அமர்ந்து புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்து கொண்டார். டிக்சனரியின் உதவியால் அவர் சட்டம் பயின்று வழக்கையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றார். இறுதியில் தனது வழக்கில் கடந்த 2017 இல் வெற்றியும் பெற்றார் என்றால் ஆச்சரியம் தானே.

முதல் இடம்

சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளதாம்.  இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடமும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

தலையில் இயற்கையான டார்ச் லைட்டை சுமக்கும் மீன்

ஆழ்கடல் அதிசயங்கள் தேட தேட தீராதவை. ஆழ்கடலுக்குள் 3 ஆயிரம் அடி ஆழம் வரை சூரிய ஒளி செல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு தகவமைப்புகளை ஆழ்கடல் உயிரினங்கள் கொண்டுள்ளன. அவற்றில் மின்சார மீன், ஒளிரும் ஆக்டோபஸ் போன்ற உயிரினத்தை போலவே மற்றொரு அதிசயத்தையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அது anglerfish எனப்படும் ஆழ்கடல் மீன் இருட்டை சமாளிக்க புதிய உத்தியை கையாள்வதாக தெரியவந்துள்ளது. இதன் தலைப்பகுதியில் போட்டோ பாக்டீரியா எனப்படும் ஒளிரும் பாக்டீரியாக்களை கவர்வதன் மூலம் ஒளியை உமிழச் செய்கின்றன என தெரியவந்துள்ளது. இது தலையில் டார்ச் லைட்டை பொறுத்தியது போன்ற தோற்றத்தையும் அதற்கு அளிக்கிறது. இயற்கை எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்கள்.

குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

மாறாத வழக்கம்

பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் ஒரு பெட்டியை வைத்திருப்பது எதற்காக என்றால், அதற்கு 'பட்ஜெட்' என்ற பெயர்தான் காரணம். பிரெஞ்ச் மொழியில் 'பவ்கெட்' என்றால் தோல் பை என்று பொருள். அதிலிருந்துதான் பட்ஜெட் என்ற சொல் உருவானது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன் நிதி அமைச்சர் அந்நாட்டு வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும்போது உதவியாளரிடம் ஓபன் தி பட்ஜெட் என்று கூறினார். மேலும், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, லண்டனின் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் முன் சூட்கேசை நிதி அமைச்சர்கள் நாலாபுறமும் காட்டுவது தொன்று தொட்ட நடைமுறை. அதில் உள்ள அச்சடித்த காகிதங்கள் அடுத்த ஓராண்டில் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது சிறப்பம்சம். அதுவே இன்று வரை நமது நிதியமைச்சர்களுக்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony