முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் நவீன மின்சார கார்

-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். -

புதிய வசதி

ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

உட்டியாணா பயிற்சி

தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ப்ளூ வேல் கேம்

ப்ளூ வேல் சார்ந்த தேடல்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளதாம். இந்நிலையில் உலக அளவில் 30 நகரங்களில் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் புளூ வேல் இடம்பெற்றுள்ளது. இந்த கேமினை கடந்த 12 மாதங்களில் கூகுளில் அதிக முறை தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளதாம்.

பிரசவத்துக்கு முன்பாகவே 21 வாரத்தில் பிறந்த குழந்தை

ஒரு சில குழந்தைகள் பிரசவத்துக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அவை 8 அல்லது 9 மாதத்தில் பிறந்தாலும் போதிய வளர்ச்சி இருந்தால் அவற்றை இன்குபேட்டர் எனப்படும் மருத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பராமரித்து தேற்றி விடுவர். ஆனால் உலகின் மிகப் பெரிய அதிசயமாக வெறும் 21 வாரத்தில் பிறந்த குழந்தை தற்போது வளர்ச்சி அடைந்து உயிர் பிழைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குத்தான் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 21 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது அதன் எடை வெறும் 420 கிராம் மட்டுமே. பொதுவாக பிரசவ காலம் என்பது 280 நாட்கள், ஆனால் இந்த குழந்தை 148 நாட்களிலேயே பிறந்து விட்டது. மிகவும் நுட்பமான மருத்துவ கவனிப்பின் மூலம் அந்த குழந்தை தற்போது 16 மாத குழந்தையாக உயிர் பிழைத்துள்ளது. இதில் மற்றொரு அதிசயமாக இரட்டையராக பிறந்த இந்த குழந்தையுடன் பிறந்த மற்றொரு பெண் குழந்தை பிறந்த ஒரு நாளிலேயே இறந்து விட்டது என்பதுதான். இந்த குழந்தையை பிரசவம் பார்த்த டாக்டர் பிரெய்ன் சிம்ஸ் கூறுகையில் எனது 20 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை என வியந்துள்ளார். இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விரைவில் வருகிறது

பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!