முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மொபைல் வேலட்

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொபைல் வேலட்டும் பாதுகாப்பானது இல்லை என்று குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற பெரும்பாலான மொபைல் வேலட்டுகள் இயங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் கடவுச் சொல் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மொபைல் பேங்கிங் எனப்படும் செல்போன்கள் மூலம் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தினை குவால்கோம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

கிரேட் நிக்கோபார்

நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார் தீவு. இந்தத் தீவுப்பகுதியில் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு மூலமாக இந்த தீவை நாம் அடையலாம்.

ஆச்சரியம் ஆனால் உண்மை

பிரிட்டனில் ஒரு ஆண், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறார்.  உலகம் உருவான நாள் முதல் குழந்தைக்கு தந்தை என ஆண் இருந்து வருகிறார். குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணே தாயாக இருந்து வருகிறார். இந்த நிகழ்வை மாற்றும் விதமாக  இந்த பிரிட்டனில் ஆண் ஒருவர், கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக சட்ட பூர்வமாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர்  பெண் பாலினத்தில் இருந்து ஆண் பாலினமாக மாறும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர். இவர் தனது வயிற்றில் கருவை சுமந்து குழந்தை பெறும் போது குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த முதல் பிரிட்டன் ஆண் என்ற சாதனையை படைப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago