முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

உலகின் முதல் சோலார் பேனல் மின் பூங்கா எங்கு நிறுவப்பட்டது?

மின் ஆற்றலைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் பற்றித் தொடர்ந்து எப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. சூரியனிடமிருந்து ஏராளமான மின் ஆற்றலைப் பெற இயலும் என்றாலும், தற்போது அந்த மின் ஆற்றலின் மிகக் குறைந்த அளவையே நாம் பயன்படுத்தி வருகிறோம். சூரிய மின் ஆற்றலின் ஒரு சிறு பகுதியைக் கொண்டே உலகின் மின் ஆற்றல் தேவையைப் பெருமளவு நிறைவு செய்ய இயலும். முதலாவது சூரிய மின் ஆற்றல் நிலையம் (solar energy station) ஒடெய்லோ (Odeillo) என்ற இடத்தில் 1969ஆம் ஆண்டு ஃபிரான்சில் நிறுவப்பட்டது. மின் ஆற்றலைப் பெறுவதற்கு சூரிய ஒளியின் திறனைப் பயன்படுத்தியதோடு, எவ்வளவு மின் ஆற்றலைப் பெற முடியுமோ அவ்வளவு மின் ஆற்றலைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பல சோலார் பேனல்களும் பயன்படுத்தப்பட்டன. எதிர்காலம் சூரிய ஒளி மின் ஆற்றலையே நம்பியுள்ளது என்றால் இன்றைக்கு யார் நம்ப போகிறார்கள்.

இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

புராணங்களில் இடம் பெற்றுள்ள பறவைகள் எது தெரியுமா?

எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.

எங்கும் 'கார்டு'

ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago