முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய பாதுகாப்பு

இந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ராட்சத பென்குயின்கள்

பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

துணிவே துணை

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த லிசா பிலேயர் என்ற பெண் தன்னம் தனியாக, ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன், 102 நாட்களில் பயணம் செய்த்ததே சாதனையாக இருந்தது.

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago