முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகில் முதன்முதலில் வைர சுரங்கம்

இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கங்களிலிருந்து வைரம் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியா வைரத்தின் மதிப்பை உணர்ந்திருந்தது. இந்தியாவில் தான் முதன் முதலில் வைர சுரங்கங்கள் காணப்பட்டன.  கிருஷ்ணா, கோதாவரி நதி படுகைகளில் உள்ள வண்டல் படுகைகளில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்குதான் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாக இன்றும் இந்தியாவில் கிடைத்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான வைரமாகும்.

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

அதிவேக போலீஸ் கார்

புகாட்டி வேரோன் ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.5 விநாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் காரின் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாய். இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டதன் மூலம், அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள முதல் நாடு என்ற சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.

பாம்புக்கு உதவி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ என்பவர், சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடாதபடி, அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்து அது கடந்து செல்லும் வரை இவ்வாறு 5 நிமிடங்கள் இருந்துள்ளார்.

20, 450 போராட்டங்கள்

கடந்த 2‌015-ம் ஆண்டில் தமிழகத்தில் 20,450 போராட்டங்கள் நடைபெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 2-ம் இடத்திலும்  (13,089) , உத்தராகண்ட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. (10,477). அதிகளவு போராட்டங்கள் நடத்தியோர் பட்டியலில் அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் அடுத்தடுத்து உள்ளன.

ஹீலியம் சில ஆச்சரிய தகவல்கள்

நமது அறிவியல் பாடப் புத்தகத்தில் ஹீலியம் ஒரு 'inert gas' என்று படித்திருப்போம். ஹீலியம் நிறமற்றது, அடர்த்தி குறைந்தது, மணமற்றது, எரியும் தன்மை கிடையாது. ஹைட்ரஜனுக்கு அடுத்து ஹீலியம் தான் எடை குறைவான வாயு. சூரியனை கிரேக்க மொழியில் 'ஹீலியோஸ்' என்று அழைக்கிறார்கள். இதனாலேயே ஹீலியம் வாயுக்கு அந்தப் பெயரை சூட்டினர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஹீலியம் வாயு கண்டறிந்ததற்காக பிரஞ்சு வானியல் அறிஞர் Pierre Jonson மற்றும் இங்கிலாந்து வானியல் அறிஞர் Joseph Norman ஆகிய இருவரும் அக்டோபர் 20, 1868ஆம் ஆண்டில் கௌரவிக்கப்பட்டனர். இன்று உலகளவில் இயற்கையாக ஹீலியம் அமெரிக்கா, கத்தார், அல்ஜீரியா ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பூமிக்கடியில் காணப்படுகிறது. . கத்தார் தான் அதிக அளவில் வர்த்தக ரீதியாக ஹீலியமை பூமிக்கடியிலிருந்து எடுக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ஹீலியம் பெரும்பாலும் அமெரிக்காவுக்குதான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2017-ல் கத்தார் நாட்டின் மீது பல உலக நாடுகள் மோதலை மேற்கொண்ட போது‌. கத்தார் தனது ஹீலியம் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டது. 2 ஆம் உலகப் போர் நடந்த சமயத்திலும், பாராசூட் போன்றவற்றில் ஹீலியம் அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்போது ஹீலியத்தின் விலையும் குறைந்திருந்தது. தற்சமயம் ஹீலியம் பரவலாக விண்வெளி, மருத்துவம், அதிவேக (magnetic friction)இரயில்கள், மின்னணு சோதனைக் கூடங்கள், வேதியியல் கூடங்கள், vacuum machine சாதனங்களில் ஏற்படும் ஓட்டைகளை கண்டறியும் leak detector ஆகவும் மற்றும் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் போன்றவற்றை குளிரூட்டப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago