முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்டும் வெப்பம்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுகிறதாம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

நம்புங்கள் ... ஆச்சர்யம்...

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். ஆனால் இந்த குழந்தை பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகியுள்ளது ஆச்சர்யம்தான்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

பச்சையாக சாப்பிடவும்

விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கொழுப்புகள் இல்லாததால்,  ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago