முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இளமையாக இருக்க

பற்களை பாதுகாத்து இளமையாக வாழ, தினந்தோறும் இருமுறை பல் துலக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து உபயோகப்படுத்துதல்.  பல் இடுக்குளில் உள்ள உணவுகளை அகற்ற டெண்டல் பிளாஸ்  உபயோகப்படுத்துதல். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

டால்பின்களை போர்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக டால்பின்கள் கூடுதல் கூருணர்வு திறன் மிக்கவை. மேலும் மனிதர்களோடு நன்கு நெருங்கி பழகக் கூடியவை. சங்க காலத்தில் தமிழர்கள் யானைகளை போருக்கு பயன்படுத்தியது போல, தற்போது டால்பின்களை போர்களுக்கும், உளவுக்கும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் நீருக்கடியில் இருந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் உள்ள தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷியா நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளது ரஷியா . அவை பொருட்களை மீட்டெடுக்க மற்றும்  எதிரி டைவர்ஸைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவும் இதே போல் டால்பின்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறது.

ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?

ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?  அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

கைரேகை தீவு எங்கிருக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு கட்டை விரல் ரேகை போல காட்சியளிக்கும் இந்த படத்தில் உள்ளது ஒரு தீவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆக வேண்டும். இப்படி ஒரு தீவு குரோஷியா நாட்டில் உள்ள அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கும் உலர்ந்த பாறைகளின் குவியல் தான் இதற்கு கைரேகை போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது. Baljenac என்று அழைக்கப்படும் இந்த குட்டி தீவில் 23 கிமீ பரப்பு அளவுக்கு இது போன்ற பாறைகள், கற்கள் பரந்து விரிந்து நீண்ட சுவர்களை போல காணக் கிடக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதை ஐநா பாரம்பரிய பட்டியலில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என குரோஷிய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்