முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செட்டிநாடு அரண்மனை

இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்தது எப்படி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.

அமேசிங் அமேசான்

தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளாககும். உலகின் 9 நாடுகளில் எல்லைகளுக்குள் விரிந்துள்ள அமேசான் காடுகள், 1300 வகை பறவை இனங்கள், 427 வகை பாலூட்டி இனங்கள், 2,200 மீன் இனங்கள் மற்றும் 50 ஆயிரம் வகையான தாவர வகைகளின் புகலிடமாக இருக்கிறது. அதில் 16 ஆயிரம் வகை மர வகைகள்உள்ளதாம். இந்த காடுகள் கடந்த 55 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.இங்கு இதுவரை 11,000-த்துக்கும் மேற்பட்ட புதிய வகை மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிக்கப்படாத மரங்கள் மற்றும் செடிகள் இருக்கலாம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் அடையாளம் காண இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலான கால அவகாசம் தேவைப்படுமாம்.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago