முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எறும்பை விட மிகச்சிறிய பறக்கும் ரோபோ கண்டுபிடிப்பு

காற்று மாசை அறிவதற்காக உலகிலேயே மிகச் சிறிய பறக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் அளவு எறும்பை காட்டிலும் சிறியது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை கண்டறிவதற்காக இந்த குட்டி ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் எறும்பை விட சிறியதாக இருக்கும் அந்த ரோபோ காற்று மாசை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

ஏலம் விடப்படுகிறது

அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது. இவற்ரை ஏலம் விட சி அண்ட் டி நிறுவனம் முன்வந்துள்ளது. ஏலத்துக்கு விடப்படும் ஹிட்லரின் ஆல்பத்துக்கு ஆரம்ப விலை ரூ.12 லட்சத்து 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குட்டைப் பாவாடை

ஆடைகள் ஆண் பெண் வேறுபாட்டை காட்டி வருகின்றன என்ற போதிலும் பால் பேதத்தை, அதாவது பாரபட்சமான அணுகுமுறையை அவை உருவாக்கக கூடாது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பாலின சமத்துவத்தை அதான்ங்க.. ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்யும்  வகையில் ஸ்பெயினில் உள்ள பில்பாவ் நகரில் இந்த பிரச்சாரம் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு குட்டை பாவாடை அணிந்து வந்த 15 வயது சிறுவனை இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் இந்த பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரத்தில் அமைந்திருக்கும் Castleview Primary Schoolதான் தற்போது தனது பள்ளியில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் குட்டை பாவாடை அதாவது ஸ்கர்ட் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளது. பாலின பேதத்தை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரத்துக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலத்தில் கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

பண்டைய காலத்தில் எகிப்தில் கண்ணாடி பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குவார்ட்ஸ் எனும் தனிமத்தை மணலிலிருந்து பிரித்தெடுத்து அதை மரச் சாம்பலுடன் கலந்துள்ளனர். பின்னர் அதை களிமண் கலனின் வைத்து சுமார் 750 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டது. அந்த கலவை உருகி ஒரு பந்து வடிவை அடையும் வரை இந்த செயல்பாடு தொடரும். பின்னர் குளிர்விக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்படும். மீண்டும் மற்றொரு கலனில் அது செலுத்தப்பட்டு இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டதும் கண்ணாடி பெறப்படும்.

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்