முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிலவு சுற்றுலா

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப் படுகிறது. நிலவுக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை ஆகும். சுற்றுலா பயணிகள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்சியூல் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

உலகில் மனிதன் பயன்படுத்துவது வெறும் 1 சதவீதம் நீரை மட்டுமே

உலகம் நீராலானது என்பதை நாம் அறிவோம். பூமியில் சுமார் 71 சதவீதம் நீர்பரப்பே உள்ளது. அவற்றில் 96.5 சதவீத பரப்பை கடல்கள் பகிர்ந்து கொள்கின்றன. பனிப்பாறைகள் 2 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. மீதமுள்ள ஆறு, குளம், குட்டை, அருவி, ஏரி ஆகியவற்றில் உள்ள நீரை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான். பூமியில் உள்ள பாதுகாப்பான நீரில் 1 சதவீதம் மனிதன் பயன்படுத்துகிறான்.

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

அதிசய உடல்

மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்