முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

'காயம்' ஆற்றும்

எலெக்ட்ரான் மூலம் மனித உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கருவிகள் உடல் வெப்பத்தின் மூலம் இயங்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ’எலெட்க்ட்ரோ ஆக்டிவ் பாண்டேஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முறை மனித உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும் வலிமை பெற்றது என்று விஞ்ஞானிகள் சோதனை மூலம் நிரூபித்துள்ளனர்.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

தங்கத்தை முதலில் தோண்டி எடுத்தவர்கள் யார் தெரியுமா?

தங்கச் சுரங்கத் தொழில் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது. தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

மாரடைப்பு பயம்

திடீரென நம் இதயம் வேகமாக துடித்து, சுயநினைவை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டால், உடனே நாம் தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும் இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

நாசா முயற்சி

வரும் செப்டம்பர் மாதம் பென்னு குறுங்கோளை ஆய்வு செய்யும் பணிக்காக ஆசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக்கோள் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இயலுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்