முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உணவும் வலிமையும்

முடி உதிர்தல், சொட்டை ஆகிய்வற்றை தடுக்கும் ஆற்றல் உணவுகளுக்கு உள்ளன. சால்மன் மீனில் உள்ள அதிக புரதச் சத்து கூந்தலுக்கு பலம் தரும். முடிஉதிர்தல் சொட்டை ஆகிய்வை உருவாகாது. தேன் கூந்தலின் அடர்த்திக்கும், நட்ஸ் சாப்பிடுவது மரபியல் ரீதியாக வரும் சொட்டையை தடுக்கவும், பசலைக் கீரை சாப்பிட்டால் முடி உதிர்வை தவிர்க உதவும். பூசணி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய்வைகள் கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்தை தருவதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

முதல் இடம்

சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளதாம்.  இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடமும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஜூராசிக் பார்க்

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளதன் மூலம் அங்கு உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். 

ஒருவர் மட்டும் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி எங்கு அமைக்கப்பட்டது

குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..

காலணிகளின் விலை ரூ.37.75 லட்சம்

எவ்வளவு விலை உயர்ந்த காலணியாக  இருந்தாலும், அல்லது ஷூவாக இருந்த போதிலும் அதிகபட்சமாக சில ஆயிரங்கள் இருக்கக் கூடும். ஆனால் பல லட்சத்துக்கு காலணிகள் விற்றது என்றால் அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...நைக் நிறுவனம் தயாரித்துள்ள அந்த ஷூவானது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மராத்தான் போட்டியில் பங்கேற்றது என்ற பெருமையை பெற்றதாகும். இதையடுத்து இந்த  ஒரு ஜோடி காலணிகள் இந்திய மதிப்பில் ரூ.37.75 லட்சம் தொகைக்கு விற்பனையாகி உலக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்