முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜ் செய்ய புதுவகையான ஸ்டிக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பேட் மற்றும் ஸ்டிக்கரில் உள்ள இரு மெட்டல் எலக்ரோட்ஸ் பட்டன்களை போனின் யுஎஸ்பி போர்ட்டில் பொருத்தினால் சார்ஜ் ஏறிவிடும். இந்த ஸ்டிக்கர் சார்ஜர் மின்கடத்தல் முறையில் செயல்படுகிறது. இதன் விலை ரூ.6044.

சற்று அதிகம்தான்

சர்வதேச அளவில் சுமார் 550 கோடி மக்கள் உடல் குண்டானவர்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் ஆகும். குண்டாவதற்கு உடலில் ஏற்படும் அதிக அளவு கொழுப்பே காரணம்.இதனால் உடல் நலத்திற்குதான் கேடு. போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடாததே காரணம். உடல் பருமன் பூமியில் தோன்றியுள்ள புது விதமான தொற்றுநோய் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர்.குண்டாவதால் அடி வயிற்று பகுதியில் அதிக அளவு கொழுப்பு உருவாவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

வாட்ஸ் அப்பிலும்...

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜிகளான பட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில்  என பல புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

குறையாத மோகம்

உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்