முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மைக்ரோசாப்ட் முடிவு

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு பதில் பெயிண்ட் 3டி அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா

உலகின் மிக விலையுயர்ந்த மசாலா 'சிவப்பு தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, ​​இந்த மசாலாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை என்பது ஆச்சரியம் அளித்தாலும் உண்மையான விலை தான் இது. செடிகளில் இருந்து கொய்யப்படும் சுமார் ஒன்றரை லட்சம் பூக்களில் இருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கிறது. ஒரு பூவில் இருந்து மூன்று குங்குமப்பூ மட்டுமே கிடைக்கும் என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். 

ஸ்மார்ட் ஷூ

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ-வான ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

யூதர்களின் அடையாளம்

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago