முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

கூடும் ஆயுட்காலம்

பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவின்படி, நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 2030-களில் தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடுமாம்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை அப்துல்ஃபடாக் ஜான், சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். தொழில்நுட்பத் துறையில் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. இதன்மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்தவர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் கோடிகளை குவிக்கும் இளைஞர்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த மோகித் சுரிவால். வயது வெறும் 17க்கும் கீழே. ஆனால் இவரது ஆண்டு வருவாய் கோடிக்கும் மேலே. அதுவும் ஒரு சில ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது. இவர் செய்தது என்ன...இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இளசுகள் சும்மா கடலை வறுக்கும் நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டார் மோகித். உலகத்தின் அனைத்து பிராண்டுளின் கன்டென்டுகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஹிட்டாக்கினார். ஒரு கட்டத்தில் அவரது வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் மனம் தளராமல் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், ஆம்ப்மீ, யூடியூப் என கலக்கி வருகிறார். தற்போது அவரது காட்டில் பண மழை கொட்டி வருகிறது.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடராக வந்த டால்ஸ்டாயின் நாவல் பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் தெரியுமா?

உலக புகழ் பெற்ற நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய். அவரது போரும் அமைதியும், அன்னா கரீனா போன்ற நாவல்கள் உலக புகழ் பெற்றவை. அவரது மிக சிறந்த நாவலான அன்னா கரீனா 800க்கும் அதிகமான பக்கங்களை கொண்டவையாகும். அந்த நாவல் தொடக்கத்தில் ரஷ்யன் மெசஞ்சர் என்ற இதழில் தொடர் கதையாகவே வந்தது. அவரது அரசியல் கருத்துகளுடன் பத்திரிக்கை ஆசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அது முழு வடிவில் புத்தகமாக வெளிவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago