முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அலாரம் ஸ்டிக்கர்

பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க ஒரு ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் அணியும் உள்ளாடை உள்ளிட்ட எதன் மீதும் ஒட்டிக்கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனை மையமாகக் கொண்டு செயல்படும் இதை, தவறான நோக்கத்தில் யாராவது தொட்டால், குறிப்பிட்ட 5 நபர்களுக்கு இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும்.

தேள் ராணி

50 ஆயிரம் தேள்களுடன் 33 நாட்கள் இருந்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர். இதனால் இவர் "தேள் ராணி" என அழைக்கப்படுகிறார். தாய்லாந்தை சேர்ந்தகாஞ்சனா கேட்சாவ் என்பவர் கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இதற்கு முன்னர் 3 நிமிடங்கள், 28 நொடிகள் டஜன் கணக்கில் கொடிய விஷம் கொண்ட தேள்களை தனது முகம், கழுத்து மற்றும் கைகளில் உலாவ விட்டு கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இரண்டாவது முறையாக 50,000 தேள்களுடன் 12 மீட்டர் சதுர கண்ணாடி உறைக்குள் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தேள்களின் கண்பார்வை மிகவும் மங்கலானது, அது வாசனையை வைத்தே தனது உணவினை தேடிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அவதாரம்

கலை,விஞ்ஞானம்,அறிவியல், என இருந்துவரும் ரோபோக்களின் சேவை தற்போது விவசாயத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியுமாம்.

தாகம் தீர்க்க

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

புதிய கேமரா

கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கேமராவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இந்த ஸ்மார்ட் கேமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்குமாம். இது 130 டிகிரி கோணத்தில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

முதல் காற்றாடி

2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago