முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நிலவு சுற்றுலா

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப் படுகிறது. நிலவுக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை ஆகும். சுற்றுலா பயணிகள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்சியூல் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

மேம்பட்ட வசதி

ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய ஃபைல்களை மட்டும் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்து அனுப்பலாம். ஆனால் தற்போது, 50 எம்பி அளவுடைய ஃபைல்களை, ஒரு மெயிலில் இருந்து அனுப்பும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதிலும் பாதுகாப்பு

பாஸ்வேர்டுடன் வரும் பென் டிரைவ் புதிதாக அறிமுகமாகியுள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம், டேட்டா டிராவிலர் 2000, யுஎஸ்பி 3.1 எனும் பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென் டிரைவில் ஆல்பா நியூமரிக் கீபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பென் டிரைவில் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்ய முடியும். இதனால் அதில் உள்ள டேட்டாக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, FIPS 197 சான்று பெற்ற என்க்ரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பென் டிரைவ் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி போன்ற சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என கூறப்படுகிறது.

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago