முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வரலாற்றில் 7 ஆண்டுகள் பின்தங்கிய எத்தியோப்பியா

இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோமோடோ டிராகன் எனப்படும் பல்லிகள்

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது. 

வைட்டமின் சி

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும். எனவே வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்தால் இதை தவிர்க்கலாம்.

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago