முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க சைக்கிளிங் சிறந்த பயிற்சி. தினமும் காலை, மாலை என இரு வேளைகள் சைக்கிளிங்கில் செல்லலாம். மேலும், வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சைக்கிள்களில் செல்லுதல், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நீண்டதூரம் சைக்கிள் பயணம் போன்றவை மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேலும் உடல் பருமனையும் குறைக்கலாம்.

பெண்கள் பொது இடத்தில் தொப்பி அணிந்தால் அபராதம்

ஆடை உலகில் இன்றைக்கு ஆண்கள் பெண்களை கடந்து அத்துறை எங்கோ சென்று விட்டது. ஆனால் கடந்த காலங்களில் பெண்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் 1500 களில் அரசி முதலாம் எலிசபெத் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் எலிசபெத் தொப்பி அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் விதவிதமாக தொப்பிகளை அணிவதுடன், அவற்றை சேகரிக்கவும் செய்தார். இதன் காரணமாக அவரது ஆட்சியின் போது வார இறுதி நாட்களில் பொது இடங்களில் பெண்கள் தொப்பி அணிய தடை விதிக்கப்பட்டது. தவறி அவ்வாறு யாராவது தொப்பி அணிந்து பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம்

30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இலவசமாக கிடைக்கிறது என்றால் ஆச்சரியம் தானே.. ஆனால் வீடு இருப்பது இங்கிலாந்தில். சரி இந்த வீட்டில் அப்படி என்ன விசேசம். அதை கூறினால் பட்டியலிட முடியாத அளவுக்கு அத்தனை வசதிகளும் உள்ளன. இங்கிலாந்தின் லேக் மாவட்டத்தில் (Lake District) அமைந்துள்ள இந்த வீட்டிலிருந்து புகழ்பெற்ற வின்டர்மீரைப் (Windermere of England) பார்க்க முடியும். இந்த வீட்டில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. இந்த ஆடம்பர வீட்டில் வீட்டில் சினிமா போன்ற பல ஆடம்பர வசதிகளும் உள்ளன. இந்த வீட்டின் விலை 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் வீட்டின் விலை (30,15,93,238) 30 கோடியே 15 லட்சத்து 93 ஆயிரத்து 238 ரூபாய். ஒமேஸ் மில்லியன் பவுண்ட் ஹவுஸ் டிரா என்ற நிறுவனம் தான் அல்ஜீமர் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக 10 பவுண்டுகள் அதாவது நம்மூர் மதிப்பில் ரூ. ஆயிரத்தில் குலுக்கல் ஒன்றை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்குத்தான் இந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை வாங்குபவர்களுக்கு பத்திர கட்டணம், பதிவு கட்டணம், வரி என சகல சலுகைகளும் இலவசம் என்று அறிவித்துள்ளது. என்ன நீங்கள் கலந்து கொள்ள தயாரா

பொறாமை உணர்வு

பண்டிகைக் கொண்டாட்டம், விடுமுறைக் காலங்களில் எடுத்த புகைப்படங்களைப் நாம் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது, அதைப் பார்க்கும் முக நூல் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமை உணர்வு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கல்லறையிலும் வந்து விட்டது க்யூ ஆர் கோட்

கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது க்யூ ஆர்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த க்யூ ஆர்-கோட் பயன்படுகிறது. தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா இனி நீங்கள் மயானத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீழ் புதையுண்ட நபரின் வாழ்க்கை குறித்த வீடியோவை காணலாம். அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு  செய்து படிக்க முடியும். இனி இறந்தவர்கள் டிஜிட்டல் முறையில் நம்முடன் பேசும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தகுந்த நேரம்

ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் அல்சர் வருவதை தடுக்க வும், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தம் குறைய செய்யும். காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்